கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பெண் போலீஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரண்டு அடுக்குமாடி பார்சல் அலுவலகம் பணி நேரத்தில் இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீஸார், தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு தண்ணீர் பாட்டீல், பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்ளே அனுப்பி வைத்தனர். நள்ளிரவு வரை தொடர்ந்த மீட்பு பணியில், இடிபாடுகளில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் ஹூப்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண் போலீஸார் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.