கோப்புப்படம்

 
இந்தியா

மே.வங்கத்தில் வெற்றியை தீர்மானிக்கும் 70 தொகுதிகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் ஆட்சி அமைக்​கப் போவது யார் என்​பதை சுமார் 70 தொகு​தி​கள் தீர்​மானிக்​கும் எனக் கருதப்​படு​கிறது. இந்த தொகு​தி​களில் கடந்த தேர்​தல்​களில் பதி​வான வெற்​றி-தோல்வி வாக்கு வித்​தி​யாசத்தை விட, தற்​போது வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டோர் எண்​ணிக்கை அதி​க​மாக இருப்​பது இதற்கு காரண​மாக கூறப்​படு​கிறது.

மொத்​தம் 294 உறுப்​பினர்​களை கொண்ட மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் வழக்​கத்​துக்கு மாறாக இந்​த​முறை, வெற்​றி-தோல்​வியை எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தம்) ஏற்​படுத்​திய பாதிப்பு நிர்​ண​யிக்​கும் வாய்ப்​பு​கள் உள்​ளன. மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் காரண​மாக சுமார் 70 தொகு​தி​கள் அதிக வாக்​காளர்​களை இழந்​துள்​ளன. இந்த 70-ல் நந்​தி​கி​ராம், பவானிபூர் போன்ற முக்​கி​யத் தொகு​தி​களும் அடங்​கும். மேலும், வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டத்​தில் 'மத்​து​வா' சமூகத்​தினர் அதி​கம் வசிக்​கும் பகு​தி​களும் முர்​ஷி​தா​பாத், மால்டா மாவட்​டங்​களில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினர் அதி​கம் வசிக்​கும் பகு​தி​களும் அடங்​கும்.

          

கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலில் இந்த தொகு​தி​களில் வெற்​றி-தோல்வி வாக்கு வித்​தி​யாசம் 8,000 முதல் 15,000 வாக்​கு​களுக்​குள் இருந்​தன. 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இப்​பகு​தி​களில் பல எம்​எல்​ஏக்​கள் வெறும் 1,000 முதல் 8,000 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தனர்.

ஆனால் தற்​போது, இந்த தொகு​தி​களில் வாக்​காளர் பட்​டியல்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கானோர் நீக்​கப்​பட்​டுள்​ள​தால் மாநிலத்​தில் ஆட்சி அமைப்​பது யார் என்​பதை இத் தொகு​தி​கள் தீர்​மானிக்​கும் என கருதப்​படு​கிறது.

எனினும் கடந்த 2021 தேர்​தலை விட இம்​முறை மிகப் பெரிய வெற்​றியைப் பெறு​வோம் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி நம்​பிக்கை தெரிவிக்​கிறார். மறு​புறம், கடந்த தேர்​தலில் பாஜக 77 தொகு​தி​களில் வெற்றி பெற்​ற​தாக​வும், ஆனால் இம்​முறை அந்த எண்​ணிக்கை 170-ஐ தாண்​டும் என்​றும் மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறுகிறார். திரிண​மூல், பாஜக ஆகிய இரு கட்​சிகளும் கடும் போட்டி நில​வும் ஒவ்​வொரு தொகு​தி​யிலும் தீவிர​மாகப் போராடி வரு​கின்​றன.

கடந்த ஏப்​ரல் 7-ம் தேதி நில​வரப்​படி, மேற்கு வங்​கம் முழு​வதும் வாக்​காளர் பட்​டியல்​களில் இருந்து 90.83 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

அதாவது, கடந்த அக்​டோபர் வரை இருந்த மொத்த வாக்​காளர்​களில் 11.85 சதவீதத்​தினர் தற்​போது நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் 'பரிசீலனை​யில் உள்​ளவை' என்ற பிரி​வின் கீழ்​ மட்​டும்​ 27.83 லட்​சம்​ பெயர்​கள்​ நீக்​கப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT