குவாஹாட்டி: இஸ்ரோவின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்துக்கு 70 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்வதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று கூறியதாவது: அசாம் மாநிலம் குவாஹாட்டி அருகே சந்திரபூரில், ‘இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்’ அமைப்பின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) சுமார் 200 பிகாக்கள் அதாவது கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலத்தை அசாம் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த ரேடார் மையம் விண்வெளியில் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளைக் கண்காணித்து ஆய்வு செய்யும்; மேலும் சேகரிக்கப்படும் தகவல்களை அரசுக்கும் பிற அறிவியல் நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கொள்ளும். இத்தகைய தனித்துவமான திட்டத்தை அசாமுக்கு அனுமதித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.