புதுடெல்லி: டெல்லியின் துவாரகா பகுதியில் விசா இல்லாமல் வெளிநாட்டினர் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 24-ம் தேதி அங்கு போலீஸார் சோதனை நடத்திய போது, நைஜீரியாவைச் சேர்ந்த 7 பேர் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அவர்களை நாடு கடத்துமாறு பதிவு அலுவலக அதிகாரி உத்தரவிட்டார். இதையடுத்து, நாடுகடத்தும் நடைமுறைகளை முடிக்கும் வரையில் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.