டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. மகேந்திர பிரசாத் வீட்டுத் தோட்டத்திலிருந்து, 2 பலாப் பழங்கள் திருட்டு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது சம்பவம் குறித்து எம்.பி.யின் உதவியாளர் (பி.ஏ) போலீ ஸுக்கு தெரிவித்ததை அடுத்து, புது டெல்லி மாவட்டம் துக்ளக் சாலை காவல் நிலையத்தில் வியாழக் கிழமை ‘திருட்டு வழக்கு’ பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
“எம்.பி. வீட்டுத் தோட்டத்தில் உள்ள பலா மரத்தில், மொத்த மிருந்த 9 பழங்களில் 2-ஐ காண வில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத் துக்குச் சென்று விசாரணை நடத்தி யது உண்மைதான்” என்றார் அவர். இதனிடையே, திருடர் களை பிடிக்க சிறப்பு படை அமைக் கப்பட்டுள்ளதாகவும், 10 போலீ ஸார் தோட்டத்தில் தடயங்களை சேகரித்ததாகவும் வெளியான தகவலை போலீஸ் உயரதிகாரிகள் மறுத்தனர்.
“கொடூரமான குற்றங்க ளுக்கு மட்டுமே இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொள்வோம். கைரேகை நிபுணர்களோ, தடயவியல் நிபுணர்களோ அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை. குற்றப்பிரிவு போலீஸார் மட்டுமே அங்கு சென்று காலடித் தடங்கள் உள்ளனவா எனப் பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் காணப் படவில்லை” என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த சம்பவம் எம்.பி. வீட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. எனவே இதை நாங்கள் சாதாரண மாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே எம்.பி. வீட்டுப் பணியாளர் கள், டிரைவர்கள் மற்றும் சுற்றிலும் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினோம்” என்றார்.