துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி பெருகும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு துறைமுகங்களை இணைக்கும் ரயில் போக்குவரத்து குறித்து அறிமுகம் செய்தோம். டுனா துறைமுகம் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜைகார், திகி, ரேவாஸ், பாரதீப் ஆகிய துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
2016-17 இந்திய ரயில்வே திட்டங்களில் நர்கோல் மற்றும் ஹாஜிரா துறைமுகங்களை ரயில் வழி இணைக்கும் தனியார்-அரசு கூட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
7,517 கிமீ துறைமுகங்களை ரயில் மூலம் இணைக்கும் அவசரத் தேவை உள்ளது என்று கூறிய சுரேஷ் பிரபு இதற்காக கூட்டாளிகளை திறந்த மனதுடன் வரவேற்கிறது என்றார்.