இந்தியா

காஷ்மீரில் பதிலடி தாக்குதல்: ஜெய்ஷ்-இ- முகமது தளபதி சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

காஷ்மீரில் நடந்த என்-கவுன்டரில் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நக்பெரன் - தர்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் இந்திய பகுதிகளும் நுழையும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கொல்லப்பட்ட ஒருவர் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதி ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குலை முன்னின்று நடத்தியவர் ஆவார். ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஆவார். இவரது பெயர் முகமது இஸ்மாயில் ஆல்வி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் 2 பேர் பலி

பஞ்சாபில் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர்.

இருப்பினும் அவர்கள் கண்டுகொள்ளாமல், ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஊடுருவல்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT