இந்தியா

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 14 வரை இரவு ஊரடங்கு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் தற்போது இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், நேற்று அமராவதியில் முதல்வர் ஜெகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கள், போலீஸ் துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 21,198 பேர் கரோனாவுக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT