இந்தியா

மாநிலங்களவையில் அமளி: வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட் வருகின்றன. மாநிலங்களவையில் நேற்றும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

அமளியில் ஈடுபடும் எம்.பி.க்கள் சிலர் விசில் அடிப்பது, அவைக் காவலர்களின் தோள்களில் கையை போடுவது, பதாகைகளை ஏந்திக் கொண்டு அமைச்சர்களுக்கு முன்பாக நின்றுகொண்டு அவர்களை பார்க்கவிடாமல் மறைப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். எனக்குஇரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இதைப் புறக்கணித்துவிட்டு அவையை சந்தைக்கடைபோல நடக்க அனுமதிப்பது,இன்னொன்று அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு எதிராகநடவடிக்கை எடுப்பது. இதைசொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். அந்த அளவுக்குஎம்.பி.க்கள் செல்வார்கள் என்றுநினைக்கவில்லை.

கேள்வி நேரமும், பூஜ்ய நேரமும் உறுப்பினர்களின் சொத்து. அது அரசின் சொத்து அல்ல. அதை உறுப்பினர்கள் வீணடிக்கக் கூடாது. அவையின் கண்ணியத்தையும் மாண்பையும் உறுப்பினர்கள் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொறுமைக்கும் எல்லை உண்டு. அவையின் பொறுமையை சோதிக்கக் கூடாது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார். - பிடிஐ

SCROLL FOR NEXT