கடந்த 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுவாமி ஓம் மற்றும் முகேஷ் ஜெயின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனக்கு அடுத்து தலைமை நீதிபதியாக வருபவரின் பெயரை குடியரசுத் தலைவருக்கு பதவியில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதி பரிந்துரைக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் மனுவில் கூறி யிருந்தனர்.
மனுதாரர் இருவரில் சுவாமி ஓம் இறந்துவிட்டார். மற்றொரு மனுதாரர் முகேஷ் ஜெயின் பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை தொடர்பாக வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சிறையில் உள்ளார்.
இவ்வழக்கில் உள்நோக்கத்து டன் வேண்டுமென்றே மனு தாக்கல் செய்ததால் 2017-ல் மனுதாரர ருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம் பின்னர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ரூ.5 லட்சமாக அபராதத்தை குறைத்தது.
மேலும் அபராதத்தை குறைக்க வேண்டும் என்று கோரி முகேஷ் ஜெயின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு அபராதத்தை குறைக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரரிடம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்க அவரது நிலத்தை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.