இந்தியா

பிஹார் போலீஸ் பாதுகாப்பை ஏற்க கண்ணய்யாவின் பெற்றோர் மறுப்பு

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த 9-ம் தேதி தேசவிரோத முழக்கமிட்டதாக கண்ணய்யா குமாரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இரு நாட்களிலும் மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த புதன்கிழமை வழக்கறிஞர்களால் கண்ணய்யா தாக்கப்பட்டார்.

கண்ணய்யாவின் பெற்றோர் பிஹாரின் பேகுசராய் மாவட்டம், பஸ்னாத்பூர் டோலா என்ற கிராமத் தில் வசிக்கின்றனர். கண்ணய்யா மீதான தாக்குதலை அடுத்து அவரது பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்க பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டார். பேகுசராய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தர வின் பேரில் 4போலீஸார் கண்ணய்யாவின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். ஆனால் இந்தப் பாதுகாப்பு தங்களுக்கு தேவையில்லை என அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கண்ணய்யாவின் சகோதரர் பிரின்ஸ் குமார் கூறும்போது, “பேகுசராயில் இருந்து 2 முறை அனுப்பப்பட்ட போலீஸாரை இருமுறையும் திருப்பி அனுப்பி விட்டோம். டெல்லி நீதிமன்றத்தில் கூடியிருந்த அத்தனை போலீஸாரால் எனது சகோதரனை தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியாதவர்கள் இங்கு 4 பேர் வந்து என்ன செய்யப் போகிறார்கள்? சமூக மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு போது மானது. தேவைப்பட்டால் இவர் களையும் அழைத்து கண்ணய்யா வுக்கு பாதுகாப்பு அளிக்கலாம்” என்றார்.

கண்ணய்யாவின் பெற்றோர் பாதுகாப்பு மறுத்தபோதும் பேகுசராய் போலீஸார் வாபஸ் பெறப்படவில்லை. மாறாக அந்த கிராமப் பகுதியின் காவல் நிலையத்தில் கூடுதலாக பணி யமர்த்தப்பட்டுள்ளனர். தேவை ஏற்பட்டால் இவர்களை பயன்படுத்தும் வகையில் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

டெல்லியின் ஜேஎன்யூ விவகாரம் பிஹார் அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கண்ணய்யாவின் கைதை கண்டித்து தலைநகர் பாட்னாவில் லாலு, நிதிஷ்குமார் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் நேற்று பேரணி நடத்தின. அப்போது இந்த அமைப்பினர் பாஜக அலுவல கத்தில் தாக்குதல் நடத்தினர். பாஜகவின் அதிருப்தி தலைவரான பிஹாரை சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, இரண்டாவது நாளாக ட்விட்டரில் கண்ணய்யாவின் கைதை கண்டித்துள்ளார்.

SCROLL FOR NEXT