இந்தியா

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும் விடுமுறை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிடிஐ

மத்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நீண்ட ஆண்டுகளாக குழந்தை பிறக்காத காரணத்தி னால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தார்.

வாடகை தாய் அவரது கருவை சுமந்து 33 வாரங்கள் நிறை வடைந்த நிலையில் பேறு கால விடுப்பு அளிக்குமாறு ரயில்வே துறையிடம் விண்ணப்பித்துள் ளார். ஆனால், அவரது கோரிக் கையை ரயில்வே துறை நிராகரித் தது. கர்ப்பம் தரித்து குழந்தை பெறுபவர்களுக்கு மட்டுமே பேறு கால விடுமுறை அளிக்க முடியும் என்றும் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து ரயில்வே துறையின் உத்தரவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் ஊழியர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனூப் மோத்தா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி தலைமையிலான அமர்வு மற்ற பெண்களை போல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும் ஆறு மாத பேறுகால விடுமுறை அனுமதிக்க வேண்டும் என கடந்த மாதம் 29-ம் தேதி தீர்ப்பளித்தது.

மேலும் அந்த தீர்ப்பில், ‘‘வாடகை தாய் மூலம் அவர் குழந்தை பெற்றாலும், முதல் நாளில் இருந்தே, அந்த குழந் தையை அவர் தான் பராமரிக்க வேண்டும். எனவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக் கும் 6 மாத கால விடுமுறை அளிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT