உத்தரகண்ட் மாநிலம், பாகஸ்வர் மாவட்டம், கவுசானியில் உள்ள சிவன் கோயிலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக் கிழமை வழிபாடு நடத்தினார்.
கோடைக் காலங்களின்போது உத்தரகண்டில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கவுசானி சிவன் கோயிலுக்கு சோனியா செல்வது வழக்கம்.
கவுசானியில் முகாமிட்டுள்ள அவர் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்தார். வியாழக்கிழமை அவர் சிவன் கோயிலுக்கு சென்றார். மலைப் பாதையில் சுமார் ஒன்றரை கி.மீட்டர் தூரம் நடந்து சென்று அவர் சுவாமியை வழிபட்டார்.
பின்னர் அப்பகுதி கிராம மக்க ளுடன் கலந்துரையாடினார். இது குறித்து ரவீந்திர சிங் என்ற கிராம வாசி கூறியபோது, எங்கள் கிரா மத்துக்கு குடிநீர் வசதி இல்லை. இதுதொடர்பாக 1977-78-ல் தீட்டப் பட்ட குடிநீர் திட்டம் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இதுகுறித்து சோனியாவிடம் முறையிட்டோம் என்றார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே இந்தப் பிரச்சினை குறித்து முதல்வர் ஹரீஷ் ராவத்திடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதி அளித்தார்.