இந்தியா

சக மருத்துவரை சுட்டு கொன்ற சசிகுமார் படுகொலையா? - மனைவி புகாருக்கு போலீஸ் மறுப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் மருத்துவமனை கட்டியதில் எழுந்த பிரச்சினை தொடர்பாக சக மருத்துவரை துப்பாக்கியால் சுட்டது, தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் சசிகுமார் தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பஞ்சகுட்டா துணை ஆணையர் கமலாசன் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹைதராபாதைச் சேர்ந்த மருத்துவர்கள் சசிகுமார், உதய் குமார், சாய் குமார் ஆகிய மூவரும் இணைந்து மாதாபூரில் ரூ.15 கோடி செலவில் மருத்துவ மனை கட்டியுள்ளனர். இது தொடர்பாக மூவருக்கும் திடீரென பிரச்சினை எழுந்ததில் சக மருத் துவரான உதய்குமாரை, சசிகுமார் சுட்டுவிட்டு தலைமறைவானார். பின்னர் பண்ணை வீட்டில் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சசிகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தையும் பறி முதல் செய்துள்ளோம். சசி குமார் கொல்லப்பட்டுள்ளார் என அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். அதில் சசிகுமார் தான் உதய்குமாரை துப்பாக்கி யால் சுட்டுள்ளார் என்பது ஊர்ஜித மாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT