இந்தியா

பெகசாஸ் அறிக்கையைப் பறித்து கிழித்த திரிணமூல் எம்.பி. சாந்தனு சென்: மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தில் அமளி

செய்திப்பிரிவு

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தால் கடந்த மூன்று நாட்களாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சலசலத்து வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் தொடர்பாக ஓர் அறிக்கையை வாசித்தார்.

அப்போது குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சர் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார்.

இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கெனவே இன்று காலை அவை கூடியபோதும் அமளி ஏற்பட்டது. அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உறுப்பினர்கள் யாருக்கும் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை செய்ய விருப்பமில்லை போல் என்று கூறி அவையை பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்தது இதனால் அவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

2 மணியளவில் அவை கூடியவுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் தொடர்பாக ஓர் அறிக்கையை வாசித்தார்.

அப்போது குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சர் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார்.

இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளைப் பயன்படுத்தி மத்திய அரசு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசியை ஒட்டுகேட்டதாக எழுந்த சர்ச்சையே நாடாளுமன்ற கூடியதிலிருந்து பூதாகரமாக வெடித்துள்ளது.

SCROLL FOR NEXT