இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

கரோனா காலத்தில் போராட்டம் சற்று ஓய்ந்திருந்தநிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

அப்போது 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் முழுக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT