இந்தியா

கிருஷ்ண ராஜ சாகர் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்தது: தமிழகத்துக்கு நீரின் அளவு குறைப்பு

இரா.வினோத்

கர்நாடகாவில் குடகு மாவட்டத்திலும், கேரளாவில் வயநாட்டிலும் கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்ததால் காவிரி மற்றும் கபிலா ஆற்றில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜ சாகர் அணை நீர்மட்டம் 100.89 அடியை நெருங்கியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 13,616 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2,228 கனஅடி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. கபினிஅணையின் நீர்மட்டம் 2,279.90அடியாக உள்ள‌து. அணைக்குவிநாடிக்கு 6,626 க‌ன அடி நீர் வருகிறது. விநாடிக்கு 5,133 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்துக்கு 17,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

அடுத்த 2 தினங்கள் 10,000 கன அடிக்கும் அதிகமாக திறக்கப்பட்ட‌ நிலையில், தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,000 கன அடி நீர் மைசூரு, மண்டியா மாவட்டங்களின் பாசனத்துக்காக கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT