இந்தியா

பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது: இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை

பிடிஐ

இந்திய கடலோரப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகும் சிறை பிடிக்கப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையே குஜராத் மாநிலத்தை ஓட்டிய அரபிக் கடலில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை கடந்து மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ் தான் தொடர்ந்து கைது செய்து வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் பாகிஸ்தான் மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று குஜராத் தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் ஜக்காவ் கடலோரப் பகுதிக்குள் பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் இடைமறித்து கைது செய்தனர். மேலும் அவர்களது படகையும் சிறை பிடித்தனர். இந்த தகவலை இந்திய ராணுவ கேப்டன் அபிஷேக் மதிமன் உறுதி செய்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 440 பேரை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மாநி லத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் 860 இந்திய மீனவர்கள் படகும் பாகிஸ்தான் வசம் உள்ளது. அவர் களை விடுதலை செய்து படகு களையும் மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் சங்கம் சார்பில் சமீபத் தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT