இந்தியா

காற்று மாசடைவதில் சீனாவை கடந்தது இந்தியா: கிரீன்பீஸ் எச்சரிக்கை

பிடிஐ

2015-ம் ஆண்டில் மாசடைந்த காற்றின் அளவில் சீனாவையும் இந்தியா கடந்து விட்டது என்று உலக சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீஸ் எச்சரித்துள்ளது.

நாசா செயற்கைக் கோள் தரவுகளைக் கொண்டு கிரீன்பீஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இது குறித்து கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த நூற்றாண்டில் இந்திய மக்கள் மீது தாக்கம் செலுத்திய நுண்ணிய காற்று மாசின் அளவு சீன மக்களின் மீதான தாக்கத்தை விட அதிகம்.

காற்றில் அடையும் மாசைக் குறைக்க சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பத்தாண்டுகள் காலமாக காற்றில் மாசின் அளவு அதிகரித்தே வந்துள்ளது.

உலகச் சுகாதார மையத்தின் தரவுகளின் படி உலகில் அதிக அளவில் தூசிதும்பட்டை நிறைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தது. குறிப்பாக வட இந்தியாவில் காற்றில் தூசியின் அளவு காலங்காலமாக அதிகரித்தே வந்துள்ளது.

நாசா செயற்கைக் கோள் தகவல்களின் படி கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக காற்றில் தூசியின் அளவு இந்தியாவில் 2% அதிகரித்து வந்துள்ளது.

என்று கூறிய கிரீன்பீஸ் அறிக்கை இதனால் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT