உத்தரபிரதேச மாநிலம், அயோத் தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படுகிறது.இதற் கான பொதுமக்களிடம் நிதியும் திரட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக் கட்டளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதாவது, 2023-ம் ஆண்டிலேயே கர்ப்பக்கிரகத்தில் ராமர், சீதாதேவி, லஷ்மணர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளுள் ஒருவரான அனில் மிஸ்ரா கூறியதாவது:
2023-ம் ஆண்டில் கோயில் கட்டும் பணிகள் நிறைவு பெறும். அப்போது தற்போது தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள கோயிலில் இருந்து ராமர், சீதா, லஷ்மணர் சிலைகளை எடுத்து புதிய கோயில் கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்துக்காக கோயில் திறந்துவிடப்படும். சிலைகளை பிரதிஷ்டை செய்வது 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.
அதன் பிறகு கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். வரும் 2024-ல்தான் கோயில் கட்டுமானப் பணிகள் முழுதாக நிறைவுறும் என்று கோயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல் அன்ட் டி நிறு வனம் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் வளாகம் முழுவதும் 2025-க்குள் தயாராகும்.
இவ்வாறு அனில் மிஸ்ரா கூறினார்.
2024-ல் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்குள் கர்ப்பக்கிரகப் பணிகளை நிறைவு செய்வதற்கு பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.