இந்தியா

கரோனா பரவலை தடுக்க விடுவிக்கப்பட்ட கைதிகளை சரணடைய கேட்டு கொள்ள கூடாது: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா பரவுவதை தடுக்க, விசாரணை கைதிகளை ஜாமீனில் அல்லது பரோலில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 4 லட்சம் கைதிகள் கடந்த ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கரோனா முதல் அலை ஓய்ந்த பிறகு இவர்கள் சரண் அடைந்தனர்.

கரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்ததால், கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்ட கைதிகளை மீண்டும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டது.

இந் நிலையில் இந்த கைதிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சரண் அடையுமாறு கேட்டுக்கொள்ள வேண்டாம் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் மே 7-ம் தேதி உத்தரவை நிறைவேற்ற உயர்நிலை குழுக்கள் பின்பற்றிய விதிமுறைகளை அவற்றிடம் பெற்று, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தேசிய சட்டப்பணிகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT