இந்தியா

‘தி இந்து’வுடன் வெள்ள நிவாரணப் பணியாற்றிய 3 சென்னை சிறுவர்களுக்கு என்.டி.டி.வி. விருது

ஆர்.ஷபிமுன்னா

சென்னையின் மூன்று சிறுவர் களுக்கு கடந்த ஆண்டின் ‘சிறந்த இந்தியருக்கான விருது’ அளித்து என்.டி.டி.வி. கவுரவித்துள்ளது. ‘தி இந்து’வுடன் இணைந்து வெள்ள நிவாரணப் பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘தி இந்து’ சார்பிலும் நிவாரணப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான முகாமில் ‘தி இந்து’வுடன் இணைந்து இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு தரப்பு மக்களும் தாமாக முன்வந்து பணியாற்றினர். இவர்களில் பள்ளிச் சிறுவர்களான அசோக் (14), ஆறுமுகம் (8), அர்ஜுன் (10) ஆகிய மூவரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

வத்தலகுண்டுவில் இருந்து பிழைப்பு தேடி சென்னை வந்த மூவரின் குடும்பங்களும் சேப்பாக் கம் ரயில் பாலத்தின் கீழ் கூவம் கால்வாய்க்கு அருகில் குடிசை யில் தங்கியிருந்தன. மழை வெள்ளத்தில் இவர்களின் குடிசை களும் அடித்துச் செல்லப்பட்ட தால், வீதியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் ‘தி இந்து’வின் நிவா ரணப் பணியில் இணைந்த இவர் கள் சுற்றிச்சுழன்று பணியாற்றினர்.

இவர்கள் செய்த பணியை பற்றி வெளியான செய்திகளைப் பார்த்து,என்.டி.டி.வி. விருது தேர்வுக் குழுவினர்,‘என்.டி.டி.வி சிறந்த இந்தியர் 2015’ க்கான விருதுக்கு மூன்று சிறுவர்களையும் தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில் விருது வழங்கும் விழா, டெல்லியில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எல்.ஐ.சி. இந்தியா நிறுவனத்தின் கார்ப் பரேட் கம்யூனிகேஷன் செயல் இயக்குநர் எஸ்.என்.பட்டாச் சார்யா இவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அப்போது அரங்கில் இருந்த முக்கிய விருந் தினர்களுடன் சுமார் 600 பார்வை யாளர்களும் எழுந்துநின்று கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

விருது பெற்ற பின் மேடையில் பேசிய சிறுவர்கள், “வெள்ள நிவாரணப் பணி செய்தபோது எங்களுக்கு எந்த சிரமமும் தெரிய வில்லை. அதை அனுபவித்து ‘ஜாலியாக’ செய்தோம்” என்றனர். இவர்களில் அர்ஜுன், தான் படித்து மருத்துவராக விரும்புவதாகக் கூறினார். ஆறுமுகம், அசோக் ஆகியோர் மாவட்ட ஆட்சியராக விரும்புவதாக கூறினர்.

தமிழக அதிகாரிகளுக்கு விருது

தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, நிவாரணப் பணி சிறப்பு அதிகாரி களாகப் பணியாற்றிய ககன்தீப் சிங் பேடி, அமுதா ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் திரைப்பட நடிகர் சித்தார்த் ஆகியோரும் சிறந்த இந்தியருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

ஆங்கில செய்தி தொலைக் காட்சி சேனலான என்.டி.டி.வி. கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த இந்தியர் உட்பட 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கி வருகிறது. சிறந்த இந்தியருக்கான விருதை இதற்கு முன் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காந்தியவாதி அண்ணா ஹசாரே, இசைக் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகான் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த விழாவில் வேறு சில பிரிவுகளில் விருதுகள் பெற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் உட்பட 25 பேர் கலந்துகொண்டனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT