இந்தியா

அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திப்பு

பிடிஐ

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது, பதான்கோட் தீவிரவாத தாக்குதல், டெல்லி ஜேஎன்யூ பல்கலை. விவகாரம் ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

எனவே பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்த டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். முதல்முறையாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை பிரதமர் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளார்.

SCROLL FOR NEXT