இந்தியா

கட்சித் தாவல்: 3 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிசிர் அதிகாரி, சுனில் குமார் மண்டல் ஆகியோர், தேர்தலுக்கு முன்பாக அக்கட்சி யிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கட்சித் தலைமை கோரியது

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கேஆர்ஆர் கிருஷ்ண ராஜு கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவ தால் தகுதி நீக்கம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து விளக்கம் கேட்டு 3 எம்.பி.க்களுக்கும் மக்களவை செயலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT