இந்தியா

அப்சல் குருவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தீவிரவாதத்தால் கொல்லப்பட்டிருக்க கூடும்: தூக்கு தண்டனை அளித்த முன்னாள் நீதிபதி கண்டிப்பு

செய்திப்பிரிவு

ஜேஎன்யூ மாணவர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு விவகாரம்

‘‘நாடாளுமன்றத்தின் மீது தாக் குதல் நடத்திய அப்சல் குருவும், அவரது கூட்டாளிகளும் தங்கள் திட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது ஆதரவளித்து பேசும் எம்.பி.க்கள் கூட கொல்லப்பட்டிருப் பார்கள். அப்போது இந்தியாவின் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்’’ என்று அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளித்த முன்னாள் நீதிபதி எஸ்.என்.திங்ரா கோபமாக கூறினார்.

கடந்த 2002-ம் ஆண்டு நாடாளு மன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் களில் ஒரு பிரிவினர் நடத்தினர். அப்போது மாணவர்களில் சிலர் அப்சல் குரு மற்றும் பாகிஸ் தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட னர். அத்துடன் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் உட்பட 7 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கண்ணய்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கண்ணய்யாவை கைது செய்ததை கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளித்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என்.திங்ரா, என்டிடிவி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கடுமையாக சாடினார். பேட்டியில் முன்னாள் நீதிபதி திங்ரா கூறியதாவது:

அப்சல் குருவும் அவருடைய கூட்டாளிகளும் நடத்திய தீவிரவாத தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், இப்போது அவருக்கு ஆதரவாக கோஷமிடும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் கூட கொல்லப்பட்டிருப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40-50 பேர் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும்.

மரண தண்டனை வழங்கு வதற்கு நீதித் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகத் துக்கு அபாயகரமானவரை கொல் வதற்கு நீதித் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஒருவர் மிகவும் கொடூரமானவர், சமூகத் துக்கு ஆபத்தானவர் என்ற நிலை வரும்போது, அவரை கொல் வதற்கு இந்திய தண்டனை சட்டத் தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிபதி எஸ்.என்.திங்ரா கூறினார்.

‘ஜேஎன்யூ மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது அதிகபட்ச மானதா?’ என்று செய்தியாளர் கேட்டதற்கு, ‘‘எவ்வளவு பழமை யான சட்டம் என்றாலும் இந்தியா வில் இதுதான் சட்டம். இச்சட்டப்படி பார்த்தால், தேசத்துக்கு எதிராக பேசினாலே போதும். பேச்சுடன் எதிர்ப்பு, வன்முறையை தூண்டுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டால் கண்ணய்யாவோ, ஹர்திக் படேலோ, ஜெயப்பிர காஷ் நாராயணனோ எல்லோரும் குற்றவாளிகள்தான். இதையே தான் ஜெயப்பிரகாஷும் கூறியிருக் கிறார். அவர் மீதும் இதே சட்டத்தின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் மிகப் பழமையானது என்று நாம் சொல்கிறோம். பெரும் பாலான நமது சட்டங்கள் பழமை யானவைதான். அவை பிரிட்டிஷ் மற்றும் பிற நாடுகளில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவை’’ என்று முன்னாள் நீதிபதி திங்ரா கூறினார்.

SCROLL FOR NEXT