காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் | கோப்புப்படம் 
இந்தியா

துணிச்சலாக, சத்தமாகப் பேசுங்கள் நிதின் கட்கரி; அமைச்சர்களும் பேச வேண்டும்: தூண்டிவிடும் ப.சிதம்பரம் 

பிடிஐ


மத்திய அரசில் துணிச்சலாக அவ்வப்போது கருத்துக்களை தெரிவிக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே மவுனமாக இருக்கலாமா. மற்ற அமைச்சர்களும் தங்கள் வாய்திறந்து கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசில் அவ்வப்போது நிதின் கட்கிரி மட்டுமே துணிச்சலாக கருத்துக்களைத் தெரிவிப்பார் என நினைக்கிறேன். ஆனால், அவர்கூட இன்று மவுனமாக இருக்கிறார். அவர் தனது மவுனம் கலைத்துப் பேச வேண்டும்.

எக்ஸ் நிதியமைச்சராக இருந்தாலும் சரி, ஒய் நிதிஅமைச்சராக இருந்தாலும் சரி அனைத்து முடிவுகளும் பிரதமர் மோடிதான் எடுக்கிறார் என்று இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.

பிரதமர் மோடிதான் நிதிஅமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், பிரதமர்தான் அனைத்தும், ஆதலால் யார் அமைச்சர் என்பது முற்றிலும் பொருத்தமற்றது.

சமீபத்தில் பணவீக்கம் குறித்து நிதின்கட்கரி கருத்துத் தெரிவித்திருந்தார். அதனால்தான் நிதின்கட்கரி பெயரைக் குறிப்பிட்டேன், அவர் இன்னும் துணிச்சலாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அமைச்சரவையில் கட்கரி பேச வேண்டும். அவரின் குரலை உயர்த்திப் பேச வேண்டும். மற்ற அமைச்சர்களும் தங்களின் மவுனம் கலைத்துப் பேச வேண்டும். இப்போது அனைவரின் வாயும் பூட்டப்பட்டு மவுனமாக்கப்பட்டுள்ளார்கள்”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT