இந்தியா

புதிய வருமான வரி இணையதளம் மூலம் தினசரி 40 ஆயிரம் பேர் ரிட்டர்ன் தாக்கல்

செய்திப்பிரிவு

புதிய வருமான வரி இணையதளத்தில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதாக மத்திய நேரடி வரி வாரியம்(சிபிடிடி) தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வருமான வரி தாக்கலுக்கு எளிமைப்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை உருவாக்கியது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு படிவம் - 3, 5, 6 மற்றும் 7 ஆகியன இணையவழியில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என பலர் தெரிவித்தனர். சமீபத்தில் இன்ஃபோசிஸ் அதிகாரிகளுடன் இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஒரு மாதமாக நீடித்த இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தினசரி இணைய வழி மூலம் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 24,781 ஆகவும், ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 40 ஆயிரமாகவும் உள்ளதாக சிபிடிடி தெரிவித்துள்ளது.

தனி நபர்கள் மற்றும் இந்திய பட்டயவியல் தணிக்கை அமைப்பு (ஐசிஏஐ) மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவை திருத்தம் செய்யப்பட்டன. இதையடுத்து இணையவழி மூலம் படிவம் தாக்கல் செய்வது எளிமை செய்யப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார்-பான் எண் இணைப்பு தொடர்பாக இதுவரை 62 லட்சம்விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், இதுவரையில் 4.87 லட்சம்இ-பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிபிடிடி தெரிவித்துள்ளது. வருமான வரித் துறைஇணையதள நிர்வாகத்தை இன்ஃபோசிஸ் நிர்வகிப்பதற்கு 2019-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT