தெற்கு குஜராத்தில் நவ்சாரி மாவட்டத்தில் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து புர்னா நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
''சுபா என்ற கிராமம் அருகே பாலத்திலிருந்து புர்னா நதியில் பேருந்து கவிழ்ந்தது இதில் 36 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பேருந்து நவ்சாரியிலிருந்து உகாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் எவ்வளவு பேர் பயணித்தார்கள் என்ற விவரம் எங்களிடம் இல்லை. ஆனால் பேருந்து நெரிசலாக இருந்ததாகத்தான் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுளது'' என்று போலீஸ் உயரதிகாரி எம்.எஸ்.பரதா தெரிவித்தார்.
25 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக நவ்சாரி மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் தெரிவித்துள்ளார்.
போலீஸ் படை, தீயணைப்புத் துறை, 108 ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.