நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமை யிலான காங்கிரஸ் தோல்வியடைந் ததைப் போலவே, தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவும் தோல்வியை சந்திக்கும் என தெரிவித்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம் டோனா பவுலா வில் சனிக்கிழமை நடந்த கருத்தரங் கில் பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் தற் போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில்,
‘‘விவாதம் என்பது தான் இந்திய ஜன நாயகத்தின் பலம். தற்போதைய ஆட்சியில் மாற்று கருத்து உடைய வர்கள் விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. விவாதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை இந்திய சமூகம் ஒருபோதும் மதிக்காது. அவர்களை குப்பையில் வீசிவிடும். வரும் தேர்த லில் நிச்சயம் அது நடக்கும். நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமை யிலான காங்கிரஸ் தோல்வி அடைந்ததே இதற்கு சாட்சி’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவ்வாறு கருத்து தெரிவிக்கவில்லை என்று நேற்று யஷ்வந்த் சின்ஹா மறுப்பு தெரிவித் துள்ளார். தனது கருத்து முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஊடகங்களில் வெளியாகிவிட்ட தாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் உள்ள மூத்த தலைவர் களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகி யோர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.