இந்தியா

நாடு முழுவதிலும் விவசாயிகள் கூட்டம் நடத்த பிரதமர் மோடி திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

நாடு முழுவதிலும் விவசாயிகளுக்கான பொதுக்கூட்டங்கள் நடத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். தனது அரசு விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் சித்தரிப்பதை முறியடிப்பதற்காக பிரதமர் இக்கூட்டங்களை நடத்த உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலம் கைய கப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல முக்கிய திருத்தங் கள் செய்து மீண்டும் அறிமுகப்படுத் தியது.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவர் களுடன் பல்வேறு பொது அமைப்பு களும் சேர்ந்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடத்தின. 3 முறை அவசர சட்டமாகப் பிறப் பிக்கப்பட்ட நிலமசோதா 4-வது முறை பிரகடனம் செய்யப்படாமல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தனது அரசு விவசாயிகளுக்கு எதிரானது எனவும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவானது என்றும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக மோடி கருதுகிறார். இதே கருத்தை அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் மோடியிடம் கூறி யுள்ளனர்.

பிஹார் சட்டப்பேரவை தேர் தலில் பாரதிய ஜனதா தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட் டணியின் தோல்விக்கு விவசாயி களின் எதிர்ப்பும் ஒரு காரணமாகக் கருதப்பட்டது. எனவே தனது அரசு மீதான குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்காக நாடு முழு வதிலும் ‘கிஸான் மஹா சம்மேளா (விவசாயிகளின் மாபெரும் கூட்டம்)’ நடத்த இருக்கிறார்.

இந்த மாதமே தொடக்கம்

பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ள இந்தக் கூட்டங் கள் முதல்கட்டமாக உ.பி., ம.பி., ஒடிஷா, கர்நாடகா ஆகிய மாநிலங் களில் நடைபெற உள்ளன.

பிப்ரவரி 21-ம் தேதி ஒடிஷா செல்லும் மோடி அங்குள்ள பார்கர் நகரில் நடைபெறும் கிஸான் மஹா சம்மேளாவில் கலந்துகொள்கிறார். பார்கரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பரிலும், ஒடிஷாவை ஆளும் பிஜு ஜனதா தளம் நவம்பரிலும் விவசாயிகள் கூட்டம் நடத்தி இருந்தனர்.

பிப்ரவரி 18-ல் ம.பி.யிலும், 27-ல் கர்நாடகாவிலும், 28-ல் உ.பி.யிலும் மோடியின் கூட்டங்கள் நடை பெற உள்ளன. இதற்கான இடங் கள் இன்னும் முடிவு செய்யப் படவில்லை.

இதற்குப் பின் அடுத்த கட்டக் கூட்டங்கள் வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளன. இதுபோல் படிப்படியாக நாடு முழுவதிலும் விவசாயிகள் கூட்டங்களை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார்.

யூரியா உரத்தின் மீது வேப்ப இலை பூச்சு திட்டத்தை மோடி அரசு அமல்படுத்தியது. இதனால் விவசாயிகளுக்கான மானியம் ரூ.6,500 கோடி அரசுக்கு மிச்ச மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 75 சதவீத யூரியா உற்பத்தியில் செய்யப்படும் இந்த பூச்சினால் மண்வளம் பாது காக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுவன்றி, மாற்றி அமைக் கப்பட்ட ‘பிரதமர் பயிர் காப்பீடு திட்டம்’ என்பது சுதந்திரத்துக்கு பின் நம் நாட்டில் விவசாயிகளுக்கு அதிக நன்மை பயக்கும் திட்டம் என்பது பாஜகவின் கருத்து. இவை உட்பட விவசாயிகளுக்காக தனது அரசு அமல்படுத்திய திட்டங்கள் குறித்து மோடி இக் கூட்டங்களில் எடுத்துரைக்க உள்ளார்.

SCROLL FOR NEXT