டெல்லி அருகே ரூ.2,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.
ஐரோப்பாவிலிருந்து ஆப்கானிஸ் தானுக்கு கடத்தி வரப்படும் ஹெராயின் போதைப்பொருள் அங்கிருந்து டெல்லிக் குக் கடத்தி வரப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹெரா யின் கடத்தலைத் தடுக்க டெல்லி போலீ ஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அருகே ஃபரீதா பாத்தில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 354 கிலோ எடைகொண்ட ஹெராயின் போதைப்பொருளை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி சிறப்புப்பிரிவு காவல் ஆணையர் நீரஜ் தாக்குர் கூறிய தாவது:
இந்த வழக்கில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரும் காஷ்மீரின் அனந்த்நாகில் வசித்து வருபவர்களுமான ஹஸ்ரத் அலி, ரிஸ்வான் அகமது, பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த குர் ஜோத் சிங், குர்தீப் சிங் ஆகியோரைக் கைது செய்துள்ளோம். ஹெராயினுடன் 100 கிலோ எடையுடைய வேதிப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இந்த வேதிப்பொருளை ஹெராயினுடன் கலந்து போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2,500 கோடியாகும். ஈரானின் சபஹார் துறை முகத்திலிருந்து இந்த ஹெராயின் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஹெராயின் போதைப் பொருளை டெல்லி,பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் விற்பனை செய்வதுதான் இவர்களின் திட்டமாக இருந்தது. இந்த கடத்தல் திட்டத்துக்கு பாகிஸ்தானில் உள்ளவர்கள் உதவி வருவதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த வழக்கை போதைப்பொருள் - தீவிரவாதம் என்ற அடிப்படை யில் விசாரிக்க உள்ளோம். இந்த போதைப் பொருளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்தியாவில் தீவிரவாதச் செயல்களை செயல்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம். இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்து செயல்படுபவர் நவ்பிரீத் சிங் என்பதும் அவர் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது” என்றார்.