பொது சிவில் சட்டம் அவசியமானது. அதை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.
இந்தியாவில் 2 சட்டங்கள் உள்ளன. ஒன்று சிவில் சட்டம், இன்னொன்று கிரிமினல் சட்டம்.இந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானது இல்லை.
இந்த சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் இதனால் வரும். இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்துஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக பொது சிவில் சட்டம் வந்தால் முஸ்லிம் மக்கள், ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது.
இந்நிலையில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் உள்ளது.
இதனிடையே இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம். சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகூறும்போது, “நவீன இந்திய சமூகம் படிப்படியாக ஒரேவிதமானதாக மாறி, மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து வருகிறது,மேலும் இந்த மாறிவரும் முன்மாதிரிகளைப் பார்க்கும்போது, ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவையாக உள்ளது.
நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது அவசியம் என்றுநான் கருதுகிறேன். இதை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றார்.