இந்தியா

விமான தளம் அருகே செல்ஃபீ எடுத்த 4 பேர் கைது

பிடிஐ

பிஹாரில் விமானப்படைத் தளத் தைப் பின்னணியாகக் கொண்டு செல்ஃபீ எடுத்த காஷ்மீர் இளைஞர் கள் 4 பேரை பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விமானப்படைத் தளத்தின் கமாண்டன்ட் அருண் குமார் கூறும் போது, “காவல் துறை, புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. பிடித்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் இங்கு முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு கியோடி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவர்” என்றார்.

கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் தில்நவாஸ் ஹுசைன், நான்கு பேர் பிடிபட்டதை உறுதி செய்துள் ளார். குளிருக்கு இதமான ஆடை களை விற்பனை செய்வதற்காக அந்த இளைஞர்கள் நால்வரும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிஹார் வந்துள்ளனர்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான யாசின் பட்கல் கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, தர்பகா பாதுகாப்பு தொடர்பான பதற்றமான பகுதியாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT