வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து திருப்பதி தேவஸ் தான அதிகாரியின் வீடுகள், அலு வலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் துணை நிர்வாக அதிகாரியாக தேவஸ்தானத்தை சேர்ந்த பூபதி பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் திருப்பதி, பெங்களூரூவில் உள்ள பூபதியின் வீடுகள், திருமலையில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கிய தாக கூறப்படுகிறது. அதனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.