காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
டெல்லியிலும் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. வரியைக் காட்டி மிரட்டி பணம் வசூலித்து அரசை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி. உங்கள் கார் அல்லது பைக் வேண்டுமானால் பெட்ரோலில் ஓடலாம். ஆனால் இந்த அரசு வரி வசூல் மிரட்டலால் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, “கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் விலையை 69 முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி மூலம் இந்த அரசு ரூ.25 லட்சம் கோடியை இந்த மக்களிடமிருந்து வசூலித்துள்ளது’’ என்றார்.