இந்தியா

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர்: டெல்லி நீதிமன்றம் கருத்து

பிடிஐ

குடிபோதையில் வாகனம் ஓட்டு பவர், தற்கொலைக்கு தயாராக இருக்கும் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர் என்று டெல்லி நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி பதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோகி வர்கீஸ். குடி போதையில் ஸ்கூட்டர் ஓட்டியதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு கூறியது. அப்போது ஜோகி வர்கீஸுக்கு 6 நாள் சிறையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது. மேலும் 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப் பட்டது. 6 மாதங்களுக்கு பின் மீண்டும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக ஜோகி வர்கீஸ் தொடர்ந்த வழக்கை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. இதில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி லோகேஷ் குமார் சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார்.

அவர் தனது தீர்ப்பில், “சம்பவ நாளில் ஜோகி வர்கீஸின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 42 மடங்கு அதிகம் இருந்துள்ளது. சலுகை காட்ட இவர் தகுதியற்றவர் என்பதால் விசாரணை நீதிமன்றம் சரியாகவே தீர்ப்பளித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டு பவர், தற்கொலைக்கு தயாராக இருக்கும் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர். இவர்களால் பிறரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. சாலையில் சிறிது தவறு செய்தா லும் வர்கீஸுக்கு எத்தகைய மரணம் நிகழும் என்பது நிரூபிக்கப்பட் டுள்ளது” என்றார்.

விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த நீதிபதி லோகேஷ் குமார், சிறை தண்டனைக்காக வர்கீஸை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT