கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.
இதனால் எந்தநேரமும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர்கள் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம் வருமாறு:
கர்நாடகா -தாவர் சந்த் கெலாட்
ஹரியாணா- பண்டாரு தத்தாத்ரேயா
மிசோரம் -ஹரிபாபு கம்பாம்பட்டி
இமாச்சல பிரதேசம் -ராஜேந்திரன் விஸ்வநாத்
மத்திய பிரதேசம்- மங்குபாய் சஹான்பாய் படேல்
கோவா- ஸ்ரீதரன் பிள்ளை
திரிபுரா -சத்யதேவ் நாராயணன்
ஜார்கண்ட் -ரமேஷ் பயஸ் நியமனம்
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.