இந்தியா

ஆற்றில் செல்ஃபி எடுத்த 3 இளம்பெண்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தெலங்கானாவில் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்ற 3 இளம்பெண்கள், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரி ழந்தனர்.

தெலங்கானா மாநிலம், நிர்மல்மாவட்டம், தானூரு கிராமத்தை சேர்ந்த அஸ்மதா (15), இவரது தங்கை வைஷாலி (13), இவர்களின் உறவினர் அஞ்சலி (15) ஆகிய மூவரும் தங்கள் பாட்டி மங்கபாயுடன் விவசாயப் பணிக்குச் சென்றனர். வெயில் அதிகமாக இருந்ததால், பேத்திகள் மூவரையும் வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு, மங்கபாய் மட்டும் விவசாயப் பணியில் ஈடுபட்டார்.

இளம்பெண்கள் மூவரும் வீட்டுக்கு திரும்பும் வழியில் சிங்கன்காவ் எனும் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது மூவரும் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பின்னர் வீடு திரும்பிய மங்கபாய், பேத்திகள் இல்லாததை கண்டு பல இடங்களிலும் தேடினார். இறுதியில் அவர்களை ஆற்றங்கரையில் பார்த்ததாக ஒருவர் கூறினார்.

தகவல் அறிந்த தானூரு போலீஸார் அங்கு விரைந்து சென்று உள்ளூர் மக்கள் உதவி யுடன் மூவரின் சடலங்களையும் மீட்டனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT