இந்தியா

நண்பர்கள் தினம் கொண்டாடிய ஃபேஸ்புக்

பிடிஐ

ஃபேஸ்புக்கின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அந்நிறுவனம் சிறப்பு வீடியோ வெளியிட்டு நண்பர்கள் தினமாகக் கொண்டாடியது.

ஃபேஸ்புக்கை மாதம் 150 கோடிக் கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் 12-வது ஆண்டு தினமான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாகக் கொண்டாடும்படி, அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று, நண்பர்கள் தின வீடியோ வெளி யிட்ட ஃபேஸ்புக், நண்பர்கள் தினத் தைக் கொண்டாடியது. 2015-ம் ஆண்டு 4-வது காலாண்டு முடிவில் எதிர்பார்த்த அனைத்து வருவாய் களையும் விஞ்சி அதிகமாக ஈட்டி சாதனை படைத்தது ஃபேஸ்புக்.

நட்பு சார்ந்த வீடியோக்களை பதிவு செய்யவும், தங்களின் நட்புக் கதையை பகிர்ந்து கொள்ளவும் ஜூகர்பெர்க் வேண்டுகோள் விடுத் திருந்தார். 2015-ம் ஆண்டு ஃபேஸ் புக்குக்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்தது என அவர் தெரிவித் துள்ளார். ஃபேஸ்புக்கை மாதம் 159 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்தாண்டை விட 14 % அதிகம். அதைப்போலவே மொபைல் மூலம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் உயர்ந்து, 144 கோடியாக அதிகரித் துள்ளது.

SCROLL FOR NEXT