கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ளது அடிமலத்துரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் தாங்கள் வளர்த்து வந்த நாய் புருனோவை, கடந்த வாரம் சித்ரவதை செய்து கொன்றனர்.
மேலும், அந்த நாயின் உடலை அவர்கள் கடலில் தூக்கி வீசினர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கடந்த புதன் கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், கேரளாவில் விலங்குகளின் உரிமையை பாது காக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் ஜெய்சங்கரன் நம்பி யார், பி.கோபிநாத் அமர்வு உயிரிழந்த நாய் புருனோவின் பெயரையே, இந்த வழக்குக்கு சூட்டுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.