இந்தியா

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 28 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 28 லட்சம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் கூடுதல் செயலாளர் பாரத் லால் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறுகையில், “நடப்பு காலாண்டுக்குள்ளாக 28 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். எதிர்வரும் நாட்களில் இத்திட்டத்தை மிக தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஜல் ஜீவன்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை நாடு முழுவதும் 4.39 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT