படம் | ஏஎன்ஐ 
இந்தியா

கரோனாவிலிருந்து 61 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: 4-வது நாளாக 50ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு

ஏஎன்ஐ


இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து கடந்த 24 மணிநேரத்தில் 61 ஆயிரத்து 588 பேர் வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 48ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48ஆயிரத்து 786 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 4-வதுநாளாக தொற்று எண்ணிக்கை 50ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோன தொற்றிலிருந்து குணமடைந்து 61 ஆயிரத்து 588 பேர் வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து 49 நாளாக நோய்தொற்றைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 88ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 257 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் 1,005 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 99 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 41 கோடியே 20லட்சத்து 21 ஆயிரத்து 494 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 24மணிநேரத்தில் 19 லட்சத்து 21 ஆயிரத்து 450 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதுவரை நாட்டில் 33.57 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT