இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, கரோனா தொற்று நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்வேறுஅமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.- பிடிஐ

SCROLL FOR NEXT