இந்தியா

மாதம் ரூ.5 லட்சம் ஊதியம்; ரூ.2.75 லட்சம் வரி கட்டுகிறேன்: குடியரசுத் தலைவர் ராம்நாத் தகவல்

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் தனது சொந்த ஊருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். சொந்த ஊரான பரனூக் கிராமத்துக்கு ராம்நாத் நேற்றுமுன்தினம் சென்றார்.

முன்னதாக டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரயிலில் செல்லும் வழியில் ஜின்ஹாக் நகர் ரயில் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசியதாவது:

குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்லவில்லை என்றால், சிலர் அந்த ரயிலுக்கு தீ வைத்து விடுகின்றனர். ரயில் தீ பிடித்து எரிந்தால் யாருக்கு இழப்பு? இது அரசின் சொத்து, வரி செலுத்தும் மக்களின் சொத்து. ரயில் எரிக்கப்பட்டால் மக்களின் வரிப் பணம் வீணாகிறது.

குடியரசுத் தலைவர் என்ற முறையில் மாதந்தோறும் நான் ரூ.5 லட்சம் ஊதியம் பெறுகிறேன். இதில் ரூ.2.75 லட்சத்தை வருமான வரியாக செலுத்துகிறேன். என்னைவிட, அரசு அதிகாரிகள், இந்த கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கூட அதிக ஊதியம் பெறுகின்றனர்.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தின் மூலமே வளர்ச்சி பணி கள் மேற்கொள்ளப்படு கின்றன. எனவே அனைவரும் வரி செலுத்த வேண்டும். அரசு சொத்தை சேதப்படுத்தினால் உங்களுக்கும் எனக்கும்தான் இழப்பு. இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ

SCROLL FOR NEXT