மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் 2020-ம் ஆண்டுடன் முடிவடைந்ததையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை ஓராண்டுக்கு அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. வரும் ஜூலை 1-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் மேலும் ஓராண்டுக்கு கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை கே.கே.வேணுகோபால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நீடிப்பார் என்று தெரியவந்துள்ளது. கே.கே.வேணுகோபால், மத்தியில் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசின்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ