இந்தியா

சென்னைக்கு மழை போதும் பெங்களூரு கோயிலில் சிறப்பு யாகம்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னை இயல்புநிலைக்கு திரும்ப வேண்டுமென பெங்களூரு வில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதே போல சென்னையில் வாழும் உறவினர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பெங்களூருவாசிகள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

மழையால் தத்தளிக்கும் சென்னையில், மழை நிற்க வேண்டியும், வெள்ளம் முழுமை யாக வடிந்து இயல்பு நிலை திரும்ப வேண்டியும் பெங்களூரு ஒக்கலிப்புரம் கணேஷா கோயி லில் நேற்று சிறப்பு யாகம் நடத் தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் 3 மடாதிபதிகள் தலைமையில் நடைபெற்ற இந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றனர்.அப் போது மக்கள், “இதுவரை பொழிந்த மழையே போதும்.. வருண பகவானே மழையை நிறுத்து. கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்று'' என வேண்டிக்கொண்டதாக தெரிவித்தனர்.

இதே போல பெங்களூருவில் உள்ள‌ அல்சூரில் வசித்துவரும் கோமலவள்ளி என்பவரின் வீட்டிலும் சென்னையில் மழை நிற்க வேண்டியும், தங்களின் உறவினர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அக்கம் பக்கத்தை சேர்ந்த தமிழர்கள் உறவினர்களின் நலனுக்காக தங்களது வீடுகளிலும் சிறப்பு வேண்டுதல் நடத்தியதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT