இந்தியா

மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க திட்டம்

செய்திப்பிரிவு

மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் மின்னணு நீதிமன்ற சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேம்படுத்த மத்திய சட்ட அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நில மோசடிகளை தடுக்க முடியும். நில மோசடி தொடர்பான வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்க முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத் தில் மின்னணு நீதிமன்ற சேவை யுடன் நில ஆவணங்களை இணைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஹரியாணா மாநிலமும் விரைவில் இணைய உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றங்களில் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மின்னணு நீதிமன்ற சேவை யுடன் நில ஆவணங்களை இணைக்க பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதை பாராட்டுகிறோம். மாநில அரசுகளின் அனு மதி பெற்று அந்தந்த மாநிலங் களின் நில ஆவணங்களை இணைக்க வேண்டும்.

மோசடி தடுக்கப்படும்

இந்த நடவடிக்கையின் மூலம்பத்திரப் பதிவில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். மோசடிகள் தடுக்கப்படும். குறிப்பிட்ட நிலத் தில் வில்லங்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். தேசியஅளவிலான புதிய திட்டத்தால்பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதித் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT