இந்தியா பாகிஸ்தான் இடையே ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான கொடி அமர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது எல்லைப் பகுதியில் அமைதி நிலவ இரு தரப் பிலும் பரஸ்பரம் தகவல் தொடர்பு களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்கன் தா பாக் என்ற பகுதியில் இந்த கூட்டம் நடந்தது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் மணிஷ் மேத்தா கூறும்போது, ‘‘சுமூகமான சூழ்நிலையில் இந்த கொடி அமர்வு கூட்டம் நடந்தது. போர் ஒப்பந்த விதிமீறல், எல்லை கடந்து வரும் அப்பாவி மக்களை பத்திரமாக திருப்பி அனுப்புவது, சர்வதேச எல்லைக் கோடு அருகே கட்டுமான பணிகள் மேற்கொள்வது ஆகிய விவகாரங்கள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
தவிர எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பிலும் பரஸ்பரம் தகவல் தொடர்புகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வும் ஒப்புக் கொள்ளப்பட்டது’’ என்றார்.