நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மும்பையின் தானே நகரில் தேசிய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். கொடூரமான காயங்களால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில், மாணவியை மிகக் கொடூரமாக தாக்கிய நபர் சிறார் சட்டத்தின் கீழ் கடந்த 20-ம் தேதியன்று விடுவிக்கப்பட்டார்.
இளம் குற்றவாளி விடுதலையை எதிர்த்து தானேவில் தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு தானே மாவட்ட தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் அமித் கதம் தலைமை வகித்தார்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் நிர்பயாவின் பெற்றோருக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.