இந்தியா

தகவல் ஆணையராக மாத்தூர் நியமனம்

செய்திப்பிரிவு

பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே. மாத்தூர் தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிய விஜய் சர்மா கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய ஆணையராக ஆர்.கே. மாத்தூர் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

மாத்தூருக்கு தற்போது 62 வயதாகிறது. அவர் 65 வயதாகும் வரை 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். தலைமை தகவல் ஆணையத்தில் தற்போது 33,724 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களுக்கு விரைந்து பதில் அளிக்க புதிய ஆணையர் மாத்தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர் வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT